Monday, March 4, 2013

குப்பை மேட்டுக் கோழிச் சண்டையில்முஸ்லிம்அரசியல் தலைமைகள்… பொதுபலசேனா Vs ஜம்மியத்துல்உலமா                                                                                                      ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
ஹலால் விவகாரம் தொடர்பில்  தொடர்ந்து முன்வைக்கப்பட்ட வாதப் பிரதிவாதங்களுக்கு ஜம்மியதுல் உலமா சபையானது தனது இறுதி முடிவைத் தெரிவித்து விட்டது. “இந்த ஹலால் விவகாரத்தை நாங்கள அரசாங்கத்திடமே ஒப்படைக்கிறோம். இனி அரசாங்கமே ஹலால் சான்றிதழ்களை வழங்கட்டும்” என்று கூறிவிட்டது. ஆரம்பத்தில் ஹலால் விடயத்தை விட்டுக் கொடுக்கமாட்டோம் என்றது ஜம்மியதுல் உலமாசபை. பின்னர் முஸ்லிம்களுக்கு மட்டும் விநியோகிப்போம் என்றது. இப்போது ஆளைவிட்டால் போதும் என்ற நிலைக்கு வந்து அந்தப் பொறுப்பிலிருந்து தன்னை முற்றாக விடுவித்துக் கொண்டுள்ளது. ஆனால், பொதுபல சேனாவோ விடமாட்டோம் என்றுதெடர்ந்தும் ஒற்றைக் காலில் நிற்கிறது. அராசாங்கம் கூட இந்த வியடத்தைப் பொறுப்பேற்கத் தேவையில்லை. ஹலால் எமக்கு ஹராம் என்ற பிடிவாதத்தில் நிற்கிறது பொதுபலசேனா.

Friday, March 1, 2013


எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு:தெற்கை நோக்கிய சொற்கணைகள்
வடக்கில் எறிகணைகளாக விழுமா?      - ஏ.எச்.சித்தீக் காரியப்பர்




“எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு“ என்ற பெயரில் புதிய கூட்டணி ஒன்று உருவாகியுள்ளது. இவ்வாறான கூட்டணிகள், கூட்டமைப்புகள் உருவாவது புதிய வியடமல்ல. மிக அண்மைய காலத்தில் இரண்டு  கூட்டணிகள் தோற்றம் பெற்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தல் களத்தில் நின்றபோது எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் இராணுவத் தளபதியைக் களமிறக்குவதற்கென பெயரளவில் ஒரு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்தக் கூட்டமைப்பில் மக்கள் விடுதலை முன்னணி கூட இடம்பெற்றிருந்தது. இருப்பினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றதும் அல்லது சரத் பொன்சேகா தோல்வியடைந்ததும் இதன் ஆயுட்காலமும் முடிவுக்கு வந்ததனை அறிவோம். இறுதியாக, சரத் பொன்சேகாவை எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக நிறுத்தியது தாம் செய்த மாபெரும் தவறு என ஐக்கிய தேசியக் கட்சிகைசேதப்பட்டு அறிக்கை விடும் அளவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் தாம் இணைந்ததுதவறான முடிவு என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்திருந்ததும் அறிந்தவைகளே.. ஆக, மொத்தத்தில் இந்தக் கூட்டமைப்பானது தேர்தலை முன்வைத்த ஒரு கூட்டாக இருந்ததே தவிர வேறெந்த நோக்கத்துக்காவும் அல்லவென்பதும் தெரிய வந்தது.