Saturday, May 25, 2013

அமீர் அலிக்கு அரண்! பஷீர் சேகுதாவூதுக்கு முரண்!!
பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா?
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

“சூரிய காந்தி“  படத்தில் வரும் பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது என்ற பாடலின் இடையில் இப்படி சில வரிகள் வருகின்றன. ” உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிலவும் கூட மிதிக்கும்” என்ற கவிஞர் கண்ணதாசனின் இந்த கருத்தாழமிக்க வரிகள் பொதுவான நிலைப்பாட்டையே சுட்டி நின்றாலும் முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் அமைச்சருமான பஷீர் சேகுதாவூதுக்கு பொருத்தமில்லாத வரிகளாகத்தான் இவை இருக்கும் என நம்பலாம்.

பிரதியமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்து விட்டு நாடாளுமன்ற உறுப்பினராக அவர் இருந்த நிலையில், எதிர்பாராத விதமாக அரச தலைமையினால் அழைத்துக் கொடுக்கப்பட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள  இந்த அமைச்சர் பதவியானது தன்னை மேலே தூக்கி விட்டு மக்கள் செல்வாக்கையும் மேன்மையையும் ஏற்படுத்தி விடும் என அவர் நினைத்திருந்தால் அந்த நினைப்பு தப்பானது என்பதனை அவர் இப்போது ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். அவர் அரசியலின் உயர்ந்த இடத்தில் இருந்தாலும் மதிக்கப்படாத, தனித்து விடப்பட்ட நிலைமையே இன்று காணப்படுகிறது.

Friday, May 10, 2013


உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாகாடு: எரியும் நெருப்புக்கு எண்ணெய் ஊற்றுவதா?
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்



உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மகாநாடு எதிர்வரும் செப்டம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னெடுப்புகள் ஏலவே ஆரம்பிக்கப்பட்டு விட்டன. இப்போது அதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இந்த மகாநாட்டினை நடத்துவது தொடர்பான இறுதித் தீர்மானம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் எடுக்கப்பட்டு விட்டது.

இந்த மகாநட்டை ஸ்ரீலங்கா முஸலிம் காங்கிரஸ்தான் பின்னணியில் நின்று நடத்தவிருந்தாலும் இலங்கையிலுள்ள சகல முஸ்லிம் கலை, இலக்கிய ஒன்றியம் ஒன்றை அமைத்து அதனூடாக நடத்துவது என அந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதுவும் இந்த மகாநாடு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடத்துவது எனவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

வடமாகாண முஸ்லிம்களின் பிரச்சினையில் அமைச்சர் றிஷாத் தனித்து விடப்பட்டது ஏன்?
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தொடர்பில் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. 2009 ஆம் ஆண்டு வன்னிப் போர் முடிவுற்ற பின்னர் வடபுலத்தில் இடம்பெற்று வரும் பல விரும்பத்தகாத சம்பவங்களுடன் அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்குத் தொடர்பிருப்பதாக தமிழ் அரசியல்வாதிகள் மட்டுமின்றி தமிழ் மக்களும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

முஸ்லிம்கள் மீள்குடியேற்றம், தமிழ் அகதிகள் மீள்குடியேற்றம், காணிப் பகிர்வு, காணிகள் ஆக்கிரமிப்பு, இந்திய வீடமைப்புத் திட்ட பங்கீடு, இறுதியாக முல்லைத்தீவில் தமிழ் மக்களின் சில வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டமை போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் மீது குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக சுமத்தப்பட்டே வருகின்றன.