ஏ.எச்.சித்தீக்
காரியப்பர்
ஒரே காலப்
பகுதியில் இரு விடயங்கள் நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றன. வடக்கில் புலி வேட்டை,
தெற்கில் தேரர் வேட்டை, அங்கு புலிகள்
மீண்டும் உயிர் பெறுவதாக அரசு கூறிக் கொண்டு சட்ட ரீதியாக தனது தேடுதல்களையும்
கைதுகளையும் துரிதப்படுத்திக் கொணடிருக்கும் அதேவேளை, தெற்கில் முஸ்லிம் மக்களில் அடிப்படைவாதிகள்
தோற்றம் பெற்றுள்ளதாகவும் சிலர் தேரர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாகச்
செயற்படுவதாகவும் கூறிக் கொண்டு பொதுபல
சேனா உட்படலான சில அமைப்புகள் சட்டத்துக்கு முரணான வகையில் அமைச்சு ஒன்றுக்குள்
அத்து மீறி நுழைந்து தேடுதல் நடத்தும் அளவுக்கு விடயங்கள் இடம்பெறுகின்றன. நாடு
ஒன்று. ஆனால், நடவடிக்கைகள்
இரண்டான ஒரு கடை கெட்ட நிலைமைக்கு இன்று அனைத்தும் சென்றுள்ளன.


