Sunday, July 28, 2013

அரிச்சந்திரனா? அரசியல் தந்திரனா? அமைச்சர் பஷீர் ஷேகுதாவூதே நிரூபிக்க வேண்டும்


ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள் நடைபெறவுள்ளன. வேட்பாளர்களைத் தெரிவு செய்வதிலும் வேட்புமனுத் தாக்கல் செய்வதிலும் அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

முஸ்லிம்களின் தனித்துவமிக்க கட்சியாகக் கூறப்படும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. வடமாகாணத்தைப் பொறுத்த வரையில் இந்தக் கட்சி வேட்பாளர்களைத் தெரிவு செய்வதனை விட வேட்பாளர்களைத் தேடும் வேட்டையில் ஈடுபட்டிருப்பதனையே காண முடிகிறது. காரணம், வட மாகாணத்தில் இதன் செல்வாக்கு என்பது செல்லாக் காசு ஆகியுள்ளது. வட மாகாண முஸ்லிம்களுக்கு விசேடமாக, இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை. அவர்களைப் பராமுகமாக நடத்தி வருகின்றது என்ற குற்றச்சாட்டுகள் பரவலாக முன்வைக்கப்பட்டு வருவதுடன் வடக்கு முஸ்லிம்களிடம் அமைச்சர் றிஷாதின் செல்வாக்கு அதிகரித்தும் காணப்படுகிறது. இவற்றின் காரணமாகவே  வேட்பாளர்களைத் தேடும் வேட்டைக்கு இந்தக் கட்சி தள்ளப்பட்டிருக்கலாம்.

Sunday, July 21, 2013

பேரினவாதிகளுக்குப் பேரிடி கொடுத்த கூட்டமைப்பு

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்


வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் தொடர்பான பிரச்சினைக்கு முடிவு காணப்பட்டுள்ளது. யாரை முதலமைச்சர் வேட்பாளராக நியமிப்பது என்பது தொடர்பில் இரு தரப்பான கருத்துகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இலங்கை தமிழ் அரசியல் களம் சூடு பிடித்துக் காணப்பட்டது. இந்த விடயம் தமிழ் மக்களைப் பொறுத்த வரையிலும் சிக்கலான தன்மையை ஏற்படுத்தியிருந்ததுடன் இந்த ஒரு காரணத்துக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இரண்டுபட்டு விடுமோ என்ற கவலை தமிழ் மக்களிடம் விருப்பம் சிங்கள கடுங்கோட்பாளர்களிடமும் காணப்பட்டது.

Sunday, July 14, 2013

சொன்னாலும் வெட்கமடா.. சொல்லாவிட்டால் துக்கமடா…

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்


முஸ்லிம் அரசியல்வாதிகளின் பலம், பலவீனங்கள் தொடர்பில் இப்போது பேசப்படுகிறது. அவர்கள் எந்த விடயத்தில் பலமாக உள்ளார்கள், எவ்வாறான விடயங்களில் பலவீனர்கள் என்று இப்போது நாடி பிடிக்கப்பட்டு பார்க்கப்படுகிறது. அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் இவர்களின் பலம் எங்கு உள்ளது என்பதனை நன்கு அறிந்து வைத்து அதற்கேற்ப அவர்களுக்குத் தீனி வழங்கிக் கொண்டிருக்கிறது.

பெரும்பாலான முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களது பலத்தை அவர்கள் தங்களது பதவிகளைப் பற்றிப் பிடிப்பதில் மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறார்கள். மற்றையவற்றில் அவர்கள் பலவீனர்களாகவே காணப்படுகின்றனர்.

Sunday, July 7, 2013

மன்னனின் கௌரவம் சதுரங்கம் நடுவிலே மறிக்கின்ற சேனையோ பிள்ளையின் வடிவிலே

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

அந்தக் காலங்களில் எம். ஜி. ஆரும் நம்பியாரும் நடித்த திரைப்படம் ஒன்று திரைக்கு வரப்போகிறது என்றால் அந்தப்படம் தொடர்பில் ரசிகர்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பு, எதிர்ப்பார்ப்பினைச் சொல்லவே தேவை இல்லை. அப்படி ஒரு எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் ரசிகர்கள் மத்தியில் அந்தப் படத்துக்கு இருக்கும். நம்பியாருக்கு எம்.ஜி ஆர் குத்து விடுவார். அதனுடன் நம்பியார் கதை சரி என்ற மகிழ்ச்சிகரமான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கும்.

Monday, July 1, 2013

செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா


             ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக ஆராய்வதற்கான நாடாளுமன்ற தெரிவுக் குழுவுக்கு அரச தரப்பு பிரதிநிதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அண்மையில் நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.

சபை தல்வரும்அமைச்சருமான நிமல் சிரிபால டி சில்வா தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள அரச தரப்பு பிரதிநிதிகள் குழுவில் 19 பேர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக ஆராய்வதற்காகவே இந்தக் குழு  அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தெரிவுக் குழுவுக்கான எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என்று தெரிவித்திருந்த சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, அவை கிடைக்கப்பெற்ற பின்னர் சபைக்கு அறிவிக்கப்படும் எனக் கூறினார்.