Friday, February 22, 2013

பொதுபல சேனாவின் ஹலாலும் முஸ்லிம் அரசியலின் ஹராமும்
       ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

ந்நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகம் இன்று பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. இலங்கையின் முதலாவது சிறுபான்மையின தமிழ்ச் சமூகம் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்த, முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே இரண்டாவது  சிறுபான்மையின முஸ்லிம் சமூகமும் இன்று பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அடுத்த இனரீதியான அடக்குமுறை முஸ்லிம்களுக்கே என்பது பலராலும் அன்று எதிர்வு கூறப்பட்டிருந்த நிலையில் அது இன்று நிறைவேறத் தொடங்கி விட்டது.


விடுதலைப் புலிகள் தோற்கடிக்கபட்ட பின்னர் இலங்கையில் இனி இனவாதம், மதவாதம் ஒன்றுமே இல்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  அடிக்கடி கூறிக் கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் கூறிக் கொண்டிருக்கும் போதே இன்று முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் தெற்கிலிருந்து தோற்றம் பெற்றுள்ளது.

Friday, February 15, 2013


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - ஓர் அரசியல் புலனாய்வு
                                                
                                                                                                               
  ஏ.எச்.சித்தீக் காரியப்பர்


உள்ளுர் அரசியலில் இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்பிலேயே அதிகம் பேசப்பட்டு வருகிறது. கட்சியின் உள்வீட்டுப் பிரச்சினைகள், விவகாரங்கள் வெளியே வந்து நாற்றமடிக்க ஆரம்பித்து விட்டன. என்ன நடக்கிறது என்ன நடக்கப் போகிறது என்பவற்றை கட்சியின் ஆதரவாளர்கள் திரைப்படத்தில் வரும் திருப்பமான காட்சிகளை ஆதங்கத்துடன் எதிர்பார்ப்பது போன்று அவதானித்துக் கொண்டே உள்ளனர்.

பெரும்பாலும் முன்னர் இந்தக் கட்சியை அதன் ஆதரவாளர்களே அதிகளவில் விமர்சித்துக் கொண்டிருந்தனர். ஆனால் இன்று நிலை வேறு. கட்சியின் போக்கையும் கட்சித் தலைமையின் செயற்பாடுகளையும் புறம் விட்டு விமர்சிக்காமல் முகத்துக்கு நேரே விமர்சிக்கும் நிலை கட்சிக்குள்ளேயே எழுந்துள்ளது. மு.காவுக்கு மீண்டும் இதுவும் ஒரு கெடு காலமோ தெரியவில்லை.

Monday, February 4, 2013

          இலங்கையின் கதவைத் தட்டிச் செய்தியைக் கூறிச் சென்ற அமெரிக்கா 

                                                          ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவை அமர்வில் இலங்கைக்கு எதிராக இன்னொரு பிரேரணை அமெரிக்காவின் அனுசரணையுடன் முன்வைக்கப்படவுள்ளமை தொடர்பாக முன்னர் வெளிவந்து செய்திகள் தற்போது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளன. இதனை அமெரிக்காவே ஊர்ஜிதப்படுத்தியுள்ளது. இதில் முக்கிய விடயம் என்னவெனில் இலங்கைகு விஜயம் மேற்கொண்டிருந்த அந்நாட்டின் உதவிச் செயலாளர்கள் மூவரும் இங்கேயே வைத்துத் தெரிவித்தமையாகும்.