ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
மேல்மாகாண சபைத்
தேர்தலில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அமைச்சர்
றிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் தனித்தனியாகப்
போட்டியிடுகின்றன. முஸ்லிம் காங்கிரஸ் மேல்மாகாணத்தில் தனித்துக் களமிறங்குவது
என்பது புதிய விடயமல்ல. பலமுறை களமிறங்கி தனது கட்சி உறுப்பினர்களை மேல்மாகாண
சபைக்கு அனுப்பியுள்ளது.
ஆனால,; அகில இலங்கை
மக்கள் காங்கிரஸ் திடீரென மேல்மாகாண சபைத் தேர்தலில் குதித்துள்ளது. அகில இலங்கை
முஸ்லிம் காங்கிரஸ் என்ற பெயரை அந்தக் கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என
மாற்றிய பின்னர் அனைத்து இன மக்களையும் உள்ளீர்க்கும் நடவடிக்கையை முன்னெடுத்து
வருகிறது. இந்த அடிப்படையிலும் தங்களுக்குள்ள செல்வாக்கைக் காண்பிக்கவுமே இந்தக்
கட்சி மேல்மாகாணத்தில் தனித்துப் போட்டியிடுவதாக நம்பலாம்.



