ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
கல்முனைக்கு இன்று பிடித்துள்ள சனியன் இன்னும் கழிந்தபாடில்லை. மேயர் பிரச்சினை தீர்வுடன் கெட்ட காலம் போய்விடுமென்றால் அது இப்போதும் விட்டபாடில்லை. கல்முனை இன்று அரசியல் சதுரங்க ஆடுகளமாக மாறிப் போய்விட்டது.இதன் காரணமாக அந்தப் பிரதேச மக்கள்தான் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர்.
இப்போது கல்முனைத் தேர்தல் தொகுதியில் அபிவிருத்திப் பணிகள் என்பது அறவே இல்லாத ஒன்றாகிப் போய் விட்டன. முன்னாள் அமைச்சர்களான ஏ. ஆர் மன்சூர் மற்றும் மர்ஹ_ம் எம். எச். எம். அஷ்ரஃப் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களே இன்று பெயர் சொல்லிப் பேசப்படுகின்றன. அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்களுக்கு வெள்ளையடிப்பதும் அவற்றினைப் பழுது பார்ப்பதும்தான் இன்று கல்முனையில் இடம்பெறும் மாபெரிய அபிவிருத்திப் பணிகள். புதிதாக எந்தப் பணிகளும் அங்கு இல்லை. மன்சூரின் ஓய்வின் பின்னாலும் அமைச்சர் அஷ்ரஃபின் மறைவின் பின்னாலும் கல்முனையும் இருண்டு விட்டது.
முஸ்லிம் காங்கிரஸின் கோட்டை என வர்ணிக்கப்படும் கல்முனைத் தொகுதி இன்று அபிவிருத்திப் பணிகளில் கோட்டை விட்டு விட்டது. முஸ்லிம் காங்கிரஸ் தலைமை முதல் முக்கியஸ்தர்கள் வரையானோர் இன்று இந்த தொகுதிக்கு பிரதம அதிதிகளாகவும் கௌரவ அதிதிகளாகவும் வந்து சிறப்பித்து விட்டுப் போகிறார்களே தவிரஇ வேறு எதனையும் செய்வதில்லை.. சிந்திப்பதில்லை. அந்த மக்கள் பிரச்சினைகள்இ பிரதேச அபிவிருத்திகள் தொடர்பில் அவர்கள் கவனம் செலுத்துவதே இல்லை.
கல்முனைத் தொகுதியின் அப்பாவி முஸ்லிம் மக்களும் தங்கள் தலைவிதியை நொந்து கொள்கிறார்களே தவிரஇ அவர்களால் அதற்குமேல் ஒன்றும் செய்ய முடியாத நிலை. அமைச்சர் ஹக்கீம் தொகுதிக்கு வராவிட்டால் இவர் என்ன தலைவர்..? அமைச்சர் அஷ்ரஃப்தான் நம்ம தவைர் என்று கூறிக் கொள்ளும் இந்த மக்கள், ஹக்கீம் கல்முனைக்கு வந்தால் போதும் “நீங்கதான் எங்கள் தலைவர்” என்று கூறி பழையவற்றையெல்லாம் மறந்து விடும் வஞ்சகம் தெரியாத மக்கள் அவர்கள்.
கல்முனைத் தொகுதிக்கென்று இப்போது ஒரேயொரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்தான். உள்ளார். அவர்தான் எச்.எம்.ஹாரீஸ் எம்.பி ஒருவருக்கு வருடாந்தம் அரசாங்கம் அளந்து போடும் நிதியிலிருந்து அவர் கல்முனையின் அனைத்துப் பிரதேசங்களுக்கும் கிள்ளிக் கொடுக்க வேண்டிய நிலை. அந்தப் பணத்தைக் கொண்டு கட்டடங்களுக்கு வெள்ளையடிக்கவும் வீதிகளின் ஓட்டை ஒடைசல்களை திருத்தவும்தான் முடிகிறது.
இது ஒரு புறமிருக்க, அம்பாறை மாவட்டத்தில் இன்று எத்தனையோ முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களின் அபிவிருத்தியில் கூட கவனம் செலுத்துகிறார்கள் இல்லை. கட்சி, அரசியல் என்ற போட்டிகளால் இந்த நிலைமை அந்த மாவட்டத்தில் தோன்றியுள்ளது.
இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒட்டுமொத்த அபிவிருத்தியையும் நோக்கும்போது அம்பாறை மாவட்ட அரசியல்வாதிகள் தலைகுனிய வேண்டும். அந்த மாவட்டத்தின் வேறுபட்ட அரசியல் கட்சிகளையும் வேறுபட்ட கொள்கைகளையும் கொண்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அபிவிருத்தி என்று வரும் போது ஒன்றாகி விடுகிறார்கள். இந்த விடயத்தில் அவர்கள் அரசியல் இலாப, நஷ்டக் கணக்குப் பார்ப்பதில்லை.
கடந்த வருடம் இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி தொடர்பான கூட்டமொன்றில் அந்த மாவட்டத்தின் அபிவிருத்திக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி.க்கள் மற்றும் பிரதியமைச்சர்களான ஹிஸ்புல்லாஹ், விநாயகமூர்த்தி முரளிதரன் உட்படலான பலர் ஒட்டு மொத்தமாக ஒதுக்கிய நிதி எத்தனையோ மில்லியன்களாக இருந்தன. மிகவும் முரண்பாடான அரசியல் களத்தைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அவர்கள் அபிவிருத்தி மற்றும் மக்கள் நலன் என்பனவற்றில் உடன்பாடு கொண்டு இவ்வாறு நடந்து கொண்டதாக வெளியான செய்தி கூட புல்லரிக்கச் செய்திருந்தது. அரசியலுக்கு அப்பால் அவர்கள் இந்த விடயத்தில் எவ்வாறு செயற்பட்டுள்ளார்கள் என்பதனை நாம் ஒரு பாடமாக ஏற்க வேண்டும்.
ஆனால்இ அம்பாறை மாவட்ட முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் இந்த நிலை. உள்ளூர் அர
சியல்வாதிகள் முதல் தேசிய அரசியல்வாதிகள் வரை தங்களதும் மற்றவர்களதும் ஒவ்வொரு நகர்வுகளையும் அரசியல் கண்ணோட்டத்தில் முன்னெடுக்கின்றனர், பார்க்கின்றனர்.
அது மட்டுமின்றி தான் செய்வதும் இல்லை செய்பவனை விடுவதும் இல்லை என்றான வைக்கோல் போர் நாய்களின் கதையாகவே அம்பாறை மாவட்ட முஸ்லிம் அரசியல் களம் காணப்படுகிறது. யார் குத்தினாலும் அரிசியானால் சரி என்ற அரசியல் நிலை அங்கில்லை.
மத்திய அரசின் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் விரும்பி கல்முனைப் பிரதேசத்துக்கு ஏதாவது செய்வோமென வந்தாலும் விடுகிறார்கள் இல்லை. அவற்றினையும் அரசியல் கண்ணோடு நோக்கி அவற்றினைத் தடை செய்யும் அரசியல்வாதிகள் கூட இன்று கல்முனையில் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரான எம்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இவ்வாறு தெரிவித்ததாகச் செய்திகள் வெளிவந்திருந்தன.
“கல்முனைத் தேர்தல் தொகுதி மக்களுக்கு சேவையாற்ற என்றும் நான் தயாராகவே இருக்கின்றேன். கல்முனைத் தொகுதியிலுள்ள அரசியல்வாதிகள் ஐக்கியத்துடன் செயற்பட வேண்டும். அதன் மூலம் அங்கு விரைவான அபிவிருத்தியைக் காணலாமென தனது மன ஆதங்கத்தை வெளியிட்டிருந்தார் என செய்திகள் வெளிவந்துள்ளன.
ஹரீஸ் எம்.பியின் அழைப்பின் பேரில் கல்முனைக்கு விஜயம் செய்திருந்த ஹிஸ்புல்லாஹ்இ தனது பொருளாதார அபிவிருத்தியமைச்சின் ஊடாக கல்முனையில் சில திட்டங்களுக்காகப் பல கோடி ரூபாகளை ஒதுக்க இணக்கம் தெரிவித்த நிலையிலே பிரதியமைச்சருக்கு இவ்வாறானதொரு மன உளைச்சலை ஏற்படுத்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
யார் இவ்வாறு நடந்து கொண்டாலும் அதனை ஏற்றுக் கொள்ளவே முடியாது. மத்திய அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் கூட கல்முனையில் அபிவிருத்திகளை முன்னெடுக்க முடியாதளவுக்கு ஒவ்வொரு விடயத்துக்கும் அரசியல் சாயம் பூசப்படுகிறது என்பதனையே இதன் மூலம் உணரக் கூடியதாகவுள்ளது.
ஹரீஸ் எம்பியின் இந்தத் திட்டம் வெற்றியளித்தால் தங்களுக்குள்ள குறைந்தளவு செல்வாக்கும் இல்லாமல் போய்விடும் என்று நினைக்கும் கூட்டங்களும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நிதி ஒதுக்கீட்டில் இவ்வளவு காரியங்களும் நடந்தால் முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கு மங்கி விடும் நினைக்கும் இறக்குமதி செய்யப்பட்ட அரசியல்வாதிகளினாலுமே இன்று கல்முனைத் தொகுதி அனாதையாக நிற்கிறது. ஊர் உண்டு பிச்சைக்குஇ குளம் உண்டு தண்ணீருக்கு என்ற பழமொழி அண்மைக் கால கல்முனை அரசியலுக்குப் பொருத்தமானது புதிதாக ஒருவர் அரசியலில் இறங்கினால் அவர் பயப்பாடாமல் அம்பாறை மாவட்டத்துக்கோ அல்லது கல்முனைத் தொகுதிக்கோ சென்று 'வஞ்சனை அரசியல்” என்னும் பாடத்தைக் கட்டணம் செலுத்தாமலே கற்றுக் கொள்ள முடியும் என்பதே உண்மை.
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி, வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே! வாய்ச் சொல்லில் வீரரடி. என்று பாரதியார் அன்று பாடி வைத்தது இவர்களுக்கும் பொருந்தும் போல்...
நன்றி வீரகேசரி வாரவெளியீடு 19-01-2014

No comments:
Post a Comment