Sunday, December 29, 2013

அவசரமாகக் கல்யாணம் செய்து கொண்டால் மெதுவாக உட்கார்ந்து அழுதே ஆக வேண்டும்

ஏ.எச். சித்தீக்  காரியப்பர்
கல்முனை மாநகர சபை விவகாரம் சற்றுக் காலம் ஓய்வெடுத்திருந்த நிலையில் மீண்டும் விழித்துக் கொண்டுள்ளது. மேயர் பிரச்சினைக்குத் தீர்வு கண்டால் எல்லாம் சரி. எனது பணியும் சரி என்று அமைச்சர் ஹக்கீம் விட்ட நிம்மதிப் பெருமூச்சு அடங்குவதற்கு முன்னராக, அவர் நாட்டுக்கு வெளியே உள்ள நிலையில் வரவு செலவுத் திட்டம் என்ற ஒன்றினால் அங்கும் மீண்டும் சர்ச்சைகள் ஆரம்பித்து விட்டன. ஹக்கீம் நாட்டில் இல்லாத போதுதான் அதிக விஷயங்கள் நடக்கின்றன என்பதற்கும் இதுவும் இன்னொரு சான்று.

கடந்த திங்கட்கிழமை கல்முனை மாநாகர சபையின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில் அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம், குறித்த வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படும் என்ற ஓர் அச்ச நிலையே. என்றாலும் மேயர் நிஸாம் காரியப்பர் சட்டத்தைக் காட்டி நிலைமையச் சமாளித்து தப்பித்துக் கொண்ட நிலையில் பிறிதொரு தினத்துக்கு அதனை ஒத்திவைத்து விட்டார். இருப்பினும் அன்று அங்கு நிலைமை மோசமாகவே காணப்பட்டுள்ளது. முன்னாள் மேயரும் அவருக்கு ஆதரவானவர்களும் விட்டபாடில்லை. வரவு செலவுத் திட்ட அறிக்கையின் பிரதிகளைக் கிழத்தெறித்து பேராட்டம் நடத்தும் அளவுக்கு நிலைமை அங்கு கீழாகப் போயிருந்தது. பொலிஸார் அழைக்கப்பட்டே நிலைமை கட்டுக்குள் வந்தது.

Sunday, December 22, 2013

அடுப்பை ஊதுவதனைக் கண்டு சமைப்பதாக நினைக்கக் கூடாது!

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

ஜப்பானின் இலங்கைக்கான விசேட  சமாதானத் தூதுவர் யசூசி அகாசி அண்மையில் வந்திருந்த போது பல்வேறு அரசியல் கட்சிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியனவற்றையும் அவர் சந்தித்தார். அதன்போது சம்பந்தப்பட்ட அரசியல் தரப்புகள் தங்களது நிலைப்பாடுகள், குறைபாடுகள் தொடர்பில் அகாஸியிடம் கருத்துகளைத் தெரிவித்திருந்தனர்.

தாயிடம் ஒரு பொருளைக் கேட்டு அல்லது தனது விருப்பத்தைக் கூறி அந்தத் தாய் அதனைக் கொடுக்காமல் அல்லது விருப்பத்தை நிறைவேற்றாத நிலையில் தந்தை வீட்டுக்கு வந்ததும் தேம்பித்.. தேம்பி அழுது.. நாங்க கேட்டது ஒன்றையுமே அம்மா  செய்து தரவில்லை என பிள்ளைகள் அப்பாவிடம் முறையிடுவது போல பலரும் அகாஸிடம் முறையிட்டிருந்தனர்.

Sunday, December 15, 2013

உழுகின்ற நேரத்தில் ஊருக்குப் போயிட்டு அறுக்கின்ற நேரத்தில் அரிவாளுடன் வருவதா?

ஏ.எச். சித்தீக் காரியப்பர்
கிழக்கு மாகாண சபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேறியுள்ளது. இந்த வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதில் சில பிரச்சினைகள் எழலாம் என்ற ஐயத்தின் மத்தியில் அவ்வாறானதொரு நிலை ஏற்படலாமலேயே வரவு செலவுத் திட்டம் நிறைவேறியது. இவ்வாறானதொரு ஐயத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸே ஏற்படுத்தியிருந்தது.

கிழக்கு மகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத்தலைவரான ஜெமீல் சில விடயங்களைக் கூறி அவற்றினை நிறைவேற்றினால் மட்டுமே தாம் வரவு செலவுத் திடத்துக்கு ஆதரவளிப்போம் என முன்னர் கூறியிருந்தார். இந்த விடயமே அவ்வாறானதொரு ஐயத்தை தோற்றுவித்திருந்தது. ஆனால், இறுதியில் மின்னாமல் முழங்காமல் தங்களது ஆதரவையும் வழங்கி வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற முஸ்லிம் காங்கிரஸ் முட்டுக்கொடுத்து விட்டது.