கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயரும் தற்போதைய பிரதி மேயருமான சிராஸ் மீராசாகிப் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வி- பேட்டி கண்டவர் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
கல்முனை தரவைக் கோவில் விவகாரம் நான் மேயராக இருந்த காலத்திலும் எனது கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டது. ஆனால், இதனை நான் மிக இரகசியமாக வைத்திருந்தேன். இந்த விடயத்தை ஊதிப் பெருக்க வைப்பதால் இரு இன மக்களும் பாதிக்கப்படுவர். அது கல்முனை தொகுதியின் இன ஐக்கியத்துக்கு வேட்டு வைத்து விடலாம் என நான் உணர்ந்தேன். இதனடிப்படையில் இந்த விடயத்தை மிக நிதானமாகவே கையாள நான் தீர்மானித்திருந்தேன். சம்பந்தப்பட்ட தரப்புகளை அழைத்து சுமூகமாகப் பேசித்த தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையில் இருந்தேன். ஆனால் நான் துரமிர்ஷ்வசமாக பதவி விலகியதால் எதனையும் செய்ய முடியாதிருந்தது என கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயரும் தற்போதைய பிரதி மேயருமான சிராஸ் மீராசாகிப் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். அவர் வழங்கிய பேட்டி வருமாறு