இலங்கை அரசின் தலைக்கு மேலால் தூக்குக் கயிற்றினை தொங்கவிட்டவர்கள் யார்?
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
ஜெனீவா மனித உரிமைப் பேரவையின் அடுத்த அமர்வு
மார்ச் மாதம் இடம்பெறவுள்ளது. இந்த அமர்வானது இலங்கையைப் பொறுத்த வரையில் மிக
முக்கியமானதொன்றாக நோக்கப்படுகிறது. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற
ஜெனீவா மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் எதிர்வரும் மார்ச் மாத அமர்வானது
இலங்கைக்கு மிகுந்த சோதனைமிக்கதாக அமையலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் முக்கியத்துவம் உள்ளுரில் மட்டுமல்ல.. சர்வதேசத்திலும் உணரப்பட்டுள்ளது. உலக
வரைபடத்தின் ஒரு புள்ளியாகக் காணப்படும் இலங்கைத் தீவானது மார்ச் மாத ஜெனீவா பேரவை
அமர்வில் மிக முக்கியத்துவம் பெற்ற ஒரு நாடாகவே பேசப்படவுள்ளது.

